March 15, 2018
தண்டோரா குழு
2018-19-ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தில் கலந்து கொள்ள தி.மு.க. உறுப்பினர்கள் கருப்பு சட்டையுடன் சட்டசபைக்கு வந்தனர்.
2018-19-ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடருக்காக சற்றுமுன் சட்டசபைக்கு வந்த தி.மு.க. உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்திருந்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தாமதம் செய்து வருவதை எதிர்த்து அவர்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்துள்ளனர்.