April 12, 2021
தண்டோரா குழு
கோவையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் தற்போது கடந்த ஒருவார காலமாக அதிகரித்து காணப்படுகிறது. தினமும் 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 35 வார்டுகளில் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.இந்நிலையில் கோவை மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட கருப்பக் கவுண்டர் வீதியில் ஒரே வீட்டை செய்த ஐந்து நபர்களுக்கு கொரோனா ஏற்பட்ட காரணத்தினால் அந்த வீதியில் உள்ள 16 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு 65 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் இதில் 5 நபர்களை தவிர மற்றவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் கருப்பக் கவுண்டர் வீதியில் அந்த 16 உள்ள வீதியின் ஒரு பகுதி மட்டும் மூடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,
‘‘ இந்த பகுதியில் அந்த 5 நபர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனையின் முடிவு வரும் வரை 16 வீடுகளும் தனிமைப்படுத்தப்படும். கிருமி நாசினி தெளிக்கப்பட்டு இந்த பகுதி பராமரிக்கப்பட்டு வருகிறது,’’ என்றார்.