• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கருத்தரித்தலில் ஆண்களுக்கான பங்கு குறித்து மாபெரும் கருத்தரித்தல் விழிப்புணர்வு – கின்னஸ் சாதனை

January 8, 2020

கருத்தரித்தல் தொடர்பாக ஆண்களின் பங்கு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்படுத்தியதற்காக கோவைச் சேர்ந்த மருத்துவர் அரவிந்த் சந்தர் கின்னஸ் மற்றும் இந்தியன் புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்துள்ளார்.

கோவையைச் சேர்ந்த மருத்துவர் அரவிந்த்சந்தர் ஐஸ்வர்யா கருத்தரிப்பு மருத்துவமனையில் முதன்மை மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கருத்தரித்தலில் ஆண்களுக்கான பங்கு குறித்து மாபெரும் கருத்தரித்தல் விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சியை நடத்தினார். ஆண்களுகென நடந்த இந்த விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சியில சுமார் 893 பேர் பங்கேற்றனர்.

இதுபோன்று கருத்தரித்தல் தொடர்பான ஆண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை இதுவரை யாரும் நடத்தியதில்லை என்பதனால் சாதனைகளில் முதன்மையானதாக கருதப்படும் கின்னஸ் இதனை அங்கீரத்து பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளது. இதேபோன்று இந்தியன் புக் ஆப் ரெக்கார்டிலும் இடம் பிடித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் அரவிந்த்சந்தர்,

ஆண்களுக்கான பங்கு என்பது கருத்தரித்தலில் மிக முக்கியம். இது குறித்து விழிப்புணர்வு தேவை. மாறிவரும் காலசூழல் பணிச்சூழல், உணவு பழக்கவழக்கங்கள் போன்றவை மிக முக்கிய பங்காற்றுவதாக கூறினார்.இன்றைய சூழலில் செயற்கை கருத்தரித்தல் என்பது சற்று கூடுதல் தேவையாகவே உள்ளது என்றார்.

மேலும் படிக்க