June 8, 2021
தண்டோரா குழு
அன்பின் கருவி இதயம்
என்றால் சாவை வென்றுவிடும்
என்ற பாடல் வரிக்கு தகுந்தார் போல்
கோவையில் பசியால் வாடும் உயிர்களுக்கு உணவளித்து மன பலத்தையும் உயிர் வளத்தையும் காக்கின்றனர் மஸ்ஜிதுல் முபஷ்சிர் பள்ளிவாசல் அமைப்பினர்.
இது குறித்து மஸ்ஜிதுல் முபஷ்சிர் பள்ளி அமைப்பினர் S.M.முஜிபுர் ரஹ்மான் கூறுகையில்,
நாங்கள் கடந்த கொரோனா காலத்தில் இல்லாதோருக்கு உதவும் வகையில் சுமார் 10 லட்சம் ரூபாய் வரை மக்களிடம் உதவிக்கரம் நீட்டி உதவி செய்து எங்கள் சேவையை தொடர்ந்து செய்து வந்தோம். தற்போது கொரானாவின் இரண்டாம் அலையில் மக்களின் அன்றாட வாழ்க்கையானது நோயினாலும் வறுமையினாலும் வாடிய நிலையில் உள்ளது.
தற்போது கொரோனா மற்றும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டு வருவாய் இழந்த குடும்பத்தினருக்கும்., சாலையோரம் வசிப்பவர்களுக்கு, போத்தனுார் மஸ்ஜிதுல் முபஷ்சிர் திருமறை நகர் பள்ளிகிளை சார்பில், தினமும் 500 பேருக்கு கோவை சுந்தராபுரம்,மதுக்கரை., குனியமுத்தூர், போத்தனூர்.,பி.கே புதூர், கோவைபுதூர், போன்ற பகுதிகளின் சாலையோர மக்களுக்கு சுமார் 12 கிலோமீட்டர் தூரம் வரை உணவு,தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்படுகிறது.
இது மட்டுமின்றி,தினமும் 300 பேருக்கு மளிகை பொருட்கள் தினசரி ஆட்டோவில் கொண்டு சென்று, வினியோகம் செய்து வருகின்றோம். மேலும் கொரோனாவில் பாதிக்கப்பட்டு தனிமையில் உள்ள மக்கள் எங்களுக்கு அலைபேசியில் அழைத்து உணவு மற்றும் மருந்து தேவைப்படும் நிலையில் அதற்கு உண்டான ஏற்பாடு வசதிகளையும் செய்து வருகின்றோம்.
மேலும் முன்கள பணியாளர்களான மாநகராட்சி ஊழியர்களுக்கும் உணவு மற்றும் மளிகை பொருள்களுக்கான பொருட்களையும் அளித்து வருகின்றோம்.’பசியறிவோம், உதவிடுவோம்’ திட்டத்தின் கீழ் இந்த உதவிகள் வழங்கப்படுவதாக, நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.எப்படி சாத்தியமாகிறது என்றால் தங்களின் இந்த சேவைக்கு தங்களை அடையளா படுத்தி கெள்ளாமல் மனிதர்கள் தேடிவந்து பணம் பொருள் தந்து உதவு கிண்றனர் இன்னும் உதவிகள் கிடைத்தால் எண்ணிக்கை கூட்டி உதவிடுவோம் என சொல்லும் நிர்வாகிகள். பசி பட்டினி சாவு வரக்கூடாது சார் நோயில் இறப்பு என்பதே நமக்கு பெரும் இழப்பு இதில் பசியும் சேரக்கூடாது என்பதால் இரவு பகல் என பாராமல் நாங்கள் இந்த சேவையினை தொடர்கிறோம் என்றனர்.