August 25, 2018
தண்டோரா குழு
திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு புகழ் அஞ்சலி செலுத்தும் வகையில் ” மறக்க முடியுமா கலைஞரை” என்னும் தலைப்பில் திரைப்படத்துறையினர் பங்குபெறும் அஞ்சலி நிகழ்ச்சி கோவை இந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின், துணைபொதுசெயலாளர் துரைமுருகன், கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள்
,நடிகர் சங்க தலைவர் நாசர், நடிகர்கள் சத்யராஜ், சிவக்குமார்,ராதாரவி, ராஜேஷ், பிரபு, பிரகாஷ் ராஜ், இயக்குநர் பாரதி ராஜா ,இசைஞானி இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தெலுங்கு நடிகர் மோகன் பாபு பேசுகையில்,
எனக்கு மிகவும் பிடித்த தலைவர் கருணாநிதி. அவருக்காக தான் நான் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். கலைஞரை நான் நான்கு முறை சந்தித்துள்ளளேன். நான் பெண்ணாக இருந்தால் கருணாநிதியை கல்யாணம் செய்திருப்பேன். ராஜாஜி,காமராஜ், அண்ணா வரிசையில் தமிழகத்திற்கு நல்லாட்சியை தந்தவர் கலைஞர். அவர் திரைப்படத்தில் எழுதிய வசனங்கள் மறக்க முடியாதவை,அவரது வசனத்தில் நான் பேசவேண்டும் என்று நினைத்தேன் அது முடியவில்லை.
மு என்றால் முன்னுதாரணம்
க. என்றால் கருணை
ரு. என்றால் ருத்தரம்
ணா.என்றால் நாஸ்திகம்
நி. என்றால் நிதானம்
தி. என்றால் திராவிடம்
இது தான் கருணாநிதி
மறைந்த அண்ணாவின் இதயத்தில் இருந்த கலைஞர் இன்று அவரது சமாதியிலும் ஒன்றாக இணைந்துள்ளார்.கடலையும் உப்பையும் எப்படி பிரிக்க முடியாதோ அதைப்போல் அண்ணாவைவும் கலைஞரையும் பிரிக்கவே முடியாது என்றார்.