August 24, 2018
தண்டோரா குழு
கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் திமுக அழைப்பு விடுத்தால் ஆலோசிப்போம்” என துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
ஆகஸ்ட் 30ம் தேதி நடைபெறவுள்ள திமுக தலைவர் மறைந்த கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொள்ள அதிமுகவிற்கு அழைப்பில்லை அதிமுகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டால் முதல்வரிடம் கலந்து பேசி அதில் பங்கேற்பது குறித்து முடிவு செய்யப்படும். நடைபெற உள்ள திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைதேர்தல்களில் தனித்து நின்றாலும், கூட்டணியுடன் நின்றாலும் அதிமுக உறுதியான மகத்தான வெற்றி பெறும். நடைபெற உள்ள தேர்தலில் தேமுதிக எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது என்பது அவர்கள் கொள்கை முடிவி அதில் அவர்கள் மாறாமல் இருக்க வேண்டும். அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு கட்சி பணியாற்ற வேண்டும் என்பது யூகமான கேள்வி இதற்கு பதில் வராது. கட்சிக்காக பதவியை இழக்க தயார் என பன்னீர்செல்வம் கூறியிருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என வைகை செல்வன் கூறி இருப்பது அவரது சொந்த கருத்து எனவும் அந்த கருத்து தவறானது என குறிப்பிடவிரும்பவில்லை எனவும் ஓபிஎஸ் எனக் கூறினார்.