August 8, 2018
தண்டோரா குழு
திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் மாலை 4 மணிக்கு தொடங்கும் என தலைமைகழகம் அறிவித்துள்ளது.
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் நேற்று மாலை காலமானார். இதையடுத்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கபட்டுள்ளது. அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதையடுத்து கலைஞரின் உடலை மெரினாவில் அடக்கம்
செய்வதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் மாலை 4 மணியளவில் தொடங்கும் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. மேலும், கருணாநிதியின் உடல் ராஜாஜி அரங்கத்தில் இருந்து புறப்பட்டு சிவானந்தா சாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக அண்ணா சதுக்கத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இதில் தொண்டர்களும், பொதுமக்களும் திரளாக கலந்து கொள்ளவேண்டும் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.