December 19, 2020
தண்டோரா குழு
கோவையில் இருந்து கருங்கற்களை ஏற்றி சென்ற டிப்பர் லாரி மாங்கரையை அடுத்து சென்று கொண்டிருக்கும் போது எதிர் புறமாக ஒரு கார் வந்துள்ளது. காரின் மீது மோதாமல் இருக்க லாரின் ஓட்டுனர் லாரியை சாலையின் ஓரத்தில் செலுத்தியுள்ளார். அப்போது எதிர்பாரா விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.
லாரியின் ஓட்டுநர் தப்பிய நிலையில் லாரி பள்ளத்தில் சிக்குண்டது. அதனை தொடர்ந்து கொக்கிலின் இயந்திரம் வரவழைக்கபட்டு லாரி பள்ளத்தில் இருந்து எடுக்கபட்டது. இதனால் மாங்கரை-ஆனைக்கட்டி செல்லும் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கபட்டது.மாங்கரையில் இருந்து ஆனைக்கட்டி செல்லும் சாலையில் சாலையின் ஓரத்தில் தடுப்புகள் ஆங்காங்கே மட்டும் இருப்பதால் தடுப்புகளை மாங்கரையில் இருந்து ஆனைக்கட்டி வரை போட வேண்டுமென பொதுமக்கள் கூறுகின்றனர்.