• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கம்போர்டு சர்வதேச பள்ளி சார்பில் இலவச தடுப்பூசி முகாம்

July 6, 2021 தண்டோரா குழு

கம்போர்டு சர்வதேச பள்ளி சார்பில்
மணியகாரம்பாளையத்தில் குடியிருப்போருக்கு இலவச தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

உலகம் முழுவதிலும் தொடர்ந்து கோவிட் 19 தொற்று பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசிற்கு தடுப்பு மருந்து இதுவரை ஏதும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் தடுப்பூசி மட்டுமே தற்போது தீர்வாக இருந்து வருகிறது. இதையடுத்து, பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் சார்பில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கம்போர்டு சர்வதேச பள்ளியின் தாளாளர் பூங்கோதை அருள் ரமேஷ், இரண்டு மருத்துவமனைகளுடன் இணைந்து மணியகாரம்பாளையத்தில் குடியிருப்போருக்கு இலவச தடுப்பூசி முகாமை நடத்தினார்.

மணியகாரம்பாளையம் சமுதாயக் கூடத்தில் நடந்த இரண்டுகட்டமாக 610 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி 2021 ஜூன் 27ம் தேதியும், 2021 ஜூலை 4ம் தேதியும் போடப்பட்டது.கம்போர்டு சர்வதேச பள்ளி குழுவும், கங்கா மருத்துவமனை மற்றும் ராமகிருஷ்ணா மருத்துவமனையும் இணைந்து மணியகாரம்பாளையம் பகுதியில் தேவையானோருக்கு மக்களுக்கு இந்த தடுப்பூசி போடும் பணியை சிறப்பாக மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க