March 13, 2018
தண்டோரா குழு
கமலின் கட்சியில் தாமும் சேந்துவிட்டது போல மின்னஞ்சல் வந்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் ,
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினர் சேர்க்கையில் மோசடி நடைபெறுகிறது. இன்றிலிருந்து நீங்கள் எங்களுடைய கட்சியில் உறுப்பினராக உள்ளிர்கள் என்றும், உறுப்பினர் எண் வந்துவிட்டதாகவும் தமிழிசை கூறினார்.
மேலும், மாநிலத் தலைவரையே கமல் கட்சியில் சேர்த்துள்ளதாகவும், கமல் பொய்யான கட்சி நடத்தி வருவதாகவும் தமிழிசை குற்றம் சாட்டினார்.இதுமட்டுமின்றி யாருடைய மின்னஞ்சல் அவர்கள் கையில் கிடைத்தாலும் அவர்களை எல்லாம் கமல் உறுப்பினராக சேர்ப்பாரா என்று தமிழிசை கேள்வி எழுப்பினார்.