• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கமலை பார்க்க மக்கள் கூடுவார்கள் ஆனால் வாக்களிக்க மாட்டார்கள் – வானதி ஸ்ரீனிவாசன்

March 14, 2021 தண்டோரா குழு

பாஜக தெற்கு தொகுதி வேட்பாளராக பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் இன்று அறிவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து கோவை செட்டி வீதி அசோக் நகர் பகுதியில் பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதில் கலந்து கொண்ட வானதி சீனிவாசன் பகுதியில் உள்ள மக்களை சந்தித்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

கோவை தெற்கு தொகுதியில் எங்கள் வாக்குகளை கணக்கில் எடுத்துக்கொண்டால் 100% வெற்றி என்று தெரிவித்தார். தெற்கு தொகுதியில் நான் வேட்பாளராக நிற்பதாக தகவல் வந்த போது அதிமுகவில் துவக்கத்தில் எதிர்ப்பு இருந்தது தற்போது இல்லை என்று தெரிவித்தார்.

கமலஹாசன் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வானதி சீனிவாசன் சினிமாவில் நடிப்பதற்கும் மக்கள் பணி புரிவதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்பதை கமல் தேர்தலுக்கு வந்த பின்னர் புரிந்து கொள்வார் என்று நினைக்கிறேன் சமூக ஊடகம் போன்றவற்றில் மட்டும் செயல்படுபவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி கமல் ஒரு நடிகர் என்பதால் அவரை பார்க்க மக்கள் கூடுவார்கள் ஆனால் வாக்களிக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

இந்த தொகுதியில் நாங்கள் மட்டுமே தனிப்பட்ட முறையில் 34 ஆயிரம் வாக்குகளை பெற்று உள்ளோம் என்று தெரிவித்த அவர் இம்முறை அதைவிட அதிகமான வாக்குகள் கிடைக்கும் என்று தெரிவித்தார். பாராளுமன்ற தேர்தலில் அப்பொழுது இருந்த நிலை இப்போது இல்லை என்றும் மாநில அரசு மக்கள் மனதில் நெருங்கி இருப்பதால் அதிகப்படியான வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவோம் என்று தெரிவித்தார்.

பாஜகவில் புதியவர்களுக்கும் உழைப்பவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது என்றும் வருகின்ற நாட்களில் நடிகை கௌதமி உட்பட பல்வேறு சினிமா பிரபலங்கள் இந்த தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கின்றனர் என்று தெரிவித்தார். மேலும் நாளை வேட்புமனு தாக்கல் செய்யப்போவதாகவும் அவர் கூறினார்.

மேலும் படிக்க