• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கமலை ஏன் பா.ஜ.கவின் பி டீம் என்கின்றோம் – சி.பி.எம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

December 22, 2020 தண்டோரா குழு

கமலின் கட்சி ஓட்டுகளை பிரிக்கதான்பயன்படும். அதனால்தான் அவர்களை பா.ஜ.கவின் பி டீம் என்கின்றோம் என சி.பி.எம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கோவை காந்திபுரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு கொச்சைபடுத்துவதை போல செயல்படுகின்றது்.விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வாபஸ் வாங்குவதில் என்ன தயக்கம் என்பது தெரியவில்லை சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தியும்,மத்திய அரசின் தவறான கொள்கைகளை எதிர்த்தும் தொடர் பிரச்சாரங்களை மேற்கொள்ள இருக்கின்றொம். தமிழ் மொழியை புறந்தள்ளி இந்தி, சமஸ்கிருத்த்தை மத்திய அரசு முன் நிறுத்துகின்றது.சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடக்கின்றது.ஆட்சியை காப்பாற்ற மத்திய அரசின் அனைத்து தில்லுமுல்லுக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணையாக இருக்கின்றார்.மாநில உரிமைகள் பறிப்பதை கூட தமிழக முதல்வர் கவலைபட வில்லை மாநில உரிமைகளை பறிக்கும் விதமாக கொண்டு வரப்படும் விவசாய சட்டங்களை எதிர்க்க வேண்டிய முதல்வர் அந்த சட்டங்களுக்கு ஆதரவாக பேசுகின்றார்.

வரும் 25 ம் தேதி முதல் 31 தேதி வரை 10 ஆயிரம் குழுக்கள் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கின்றோம் கொரோனா காலத்தில் மாதம் 5000 ரூபாய் கொடுக்க சொல்லி கேட்டோம். கருணையற்ற முதல்வர் கொடுக்க வில்லை பட்டினி கொடுக்கும் போது கொடுக்க மறுத்த முதல்வர் இப்போது எப்படி 2500 ரூபாய் கொடுக்கின்றார்?தேர்தலை மனதில் கொண்டுதான் இந்த திட்டத்தை முதல்வர் பிரச்சாரம் துவங்கும் போது செயல்படுத்துகின்றார்.

பணம் கொடுத்து மக்களை வாங்க முடியும் என நினைப்பது தவறானது அதிமுக – பா.ஜ.க கூட்டணியில் சமரசமற்ற போர் நடக்கின்றது என்பது தெரிகின்றது. அது கொள்கையற்ற கூட்டணி. கூட்டணியில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுத்தபட்டுள்ளது.அதிமுக – பா.ஜ.க கூட்டணி முறித்து விடுவது போல தெரியவில்லை அதிமுக பா.ஜ.க கூட்டணி மீது மக்கள் கோபம் அடைந்திருக்கின்றனர்.சினிமா என்பது வேறு, அரசியல் என்பது வேறு. ரசிகர்கள் எல்லாம் வாக்களிக்க மாட்டார்கள்.

மேலும் படிக்க