October 29, 2021
தண்டோரா குழு
கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறந்தவர் ராஜ்குமார். தமிழில் எம்.ஜி.ஆர்., தெலுங்கில் என்.டி.ஆர்.,ஐப் போன்று கன்னட மக்களால் மிகவும் நேசிக்கப்பட்டவர் ராஜ்குமார். அவரது இரண்டாவது மகன்தான் புனித்ராஜ்குமார்.
மூத்த மகன் சிவராஜ்குமாரைப் போலவே, இவரும் கன்னட திரையுலகில் நடிகர் ஆவார். கன்னட திரையுலகின் பவர்ஸ்டார் என்று கொண்டாடப்படும் அளவிற்கு மாபெரும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
இந்நிலையில் நடிகர் புனித் ராஜ்குமாருக்கு திடீரென மரடைப்பு ஏற்பட்டதால் பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் இன்று காலை 11.30 மணியளவில் அனுமதிக்கப்பட்டார்.ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 46.
அவரது மறைவு ரசிகர்களை மட்டுமின்றி திரையுலகினரையும்
அதிர்ச்சியடைய செய்துள்ளது. அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.