• Download mobile app
01 Mar 2026, SundayEdition - 3672
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கனடாவில் மசூதியில் துப்பாக்கிச்சூடு, 5 பேர் பலி

January 30, 2017 தண்டோரா குழு

கனடாவில் உள்ள கியூபெக் நகரில் ஒரு மசூதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில், 5 பேர் இறந்ததாக அஞ்சப்படுகிறது.

இது குறித்து மசூதியின் நிர்வாகி முகமத் யான்ஹு கூறும்போது,

“கியூபெக் நகரில் உள்ள ஒரு மசூதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அங்கு துப்பாக்கியுடன் வந்த மூன்று மர்ம நபர்கள் திடீரென்று கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினர்.

இந்தச் சம்பவம் நடைபெற்ற போது மசூதியில் ஏறக்குறைய 40 பேர் இருந்தனர் என்றும், 5 பேர் உயிரிழந்தாகவும், பலர் காயமுற்றிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று கூறினார்.

துப்பாக்கிச் சூடு நடைபெற்ற சம்பவத்தையடுத்து போலீசார் அந்த இடத்தைப் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும் தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் குறித்து முழுமையான தகவல்கள் எதுவும் தெரியவில்லை.

இஸ்லாமிய பெண்கள் பொது இடங்களில் முகத்திரை அணிந்து செல்ல கனடா அரசு தடை விதித்தது முதல் அங்கு வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க