• Download mobile app
21 Dec 2025, SundayEdition - 3602
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்படுபவர்களுக்கு சட்ட உதவி வழங்க தனி குழு – காந்திய மக்கள் இயக்கம்

November 17, 2017

கோவையில் கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்படுபவர்களுக்கு சட்ட உதவி வழங்குவதற்காக தனி குழு அமைத்து செயல்பட்டு வருவதாக காந்திய மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதன் மாநில செயலாளரான டென்னிஸ் கோவில்பிள்ளை கூறுகையில்,

“அண்மையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கந்துவட்டி கொடுமையின் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்தது. இது போன்றதொரு சம்பவம் மீண்டும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட ரீதியில் உதவி செய்யவும்,மனோ ரீதியில் ஆலோசணை வழங்கவும் வழக்கறிஞர்கள் மற்றும் மருத்துவர்கள் கொண்ட தனி குழு துவங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கந்துவட்டி பிரச்சிணையில் தற்போது தான் காவல்துறை அக்கறை செலுத்த துவங்கியுள்ளதாகவும் இருப்பினும் கடுமையான நடவடிக்கைகள் தேவை எனவும் வலியுறுத்தியதுடன் கந்துவட்டி பிரச்சிணையால் பாதிக்கப்படுபவர்கள் தங்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் அதற்கான அழைப்பு எண் உருவாக்கப்பட்டுள்ளது” இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க