• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கத்தி முனையில் வழிப்பறி திருநங்கை உட்பட ஏழு பேருக்கு போலீஸ் வலை

November 17, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டம் நீலாம்பூர் பகுதியில் ஏராளமான தனியார் தொழிற்சாலை நிறுவனங்கள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் வெளியூர்களை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் விடுதிகளில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் அவினாசி சாலை பகுதியில் கடந்த சில நாட்களாகவே வழிப்பறி அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்வாறான சூழலில் நேற்று இரவு பணி முடிந்து நீலாம்பூர் பகுதியில் சாலை ஓரம் நடந்து வந்து கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை ஏழு பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அவர்களிடமிருந்து செல்போன் நகை உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றுள்ளனர்.

பணம் உள்ளிட்டவற்றைப் பறித்து சென்றது மட்டுமின்றி அவற்றை திருப்பி கேட்ட இளைஞர்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளது அந்த கும்பல். காயமடைந்த இரண்டு இளைஞர்களும் அருகில் இருந்த தனியார் தொழிற்சாலையில் தஞ்சம் அடைந்தனர். இதனை எடுத்து காவல்துறையினருக்கு தகவல் அளித்து அருகில் உள்ள நிறுவனம் ஒன்றின் சிசிடிவி காட்சிகள் சோதிக்கப்பட்டன.

அதில் திருநங்கை ஒருவர் ஒரு குழுவினருக்கு செல்போன் மூலம் தகவல் அளித்த பிறகு 7 பேர் கொண்ட கும்பல் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த இளைஞர்களை மடக்கி தாக்குதல் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.இந்நிலையில் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணியை அதிகப்படுத்தி பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க