• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கத்திமுனையில் டிரைவரிடம் செல்போன், பணம் பறிப்பு 2 பேர் கைது

February 4, 2022 தண்டோரா குழு

கார் வாடகைக்கு எடுத்து கத்திமுனையில் டிரைவரிடம் செல்போன், பணம் பறித்த
2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை ரத்தினபுரி கண்ணப்ப நகரை சேர்ந்தவர் மணி (54), கால் டாக்சி டிரைவர். இவர் நேற்று சாயிபாபா காலனியில் இருந்து காரில் 2 பேரை ஏற்றிக்கொண்டு மேட்டுப்பாளையத்திற்கு வாடகைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து திரும்பி கோவை வந்தனர்.

காரில் இருந்த 2 பேரும் தங்களை சாயிபாபாகாலனி கே.கே.புதூர் அம்மாசை கோனார் தெருவில் இறக்கிவிடுமாறு தெரிவித்துள்ளனர்.அங்குள்ள காஸ் கம்பெனி அருகே சென்ற போது, காரில் இருந்த 2 பேரும் திடீரென கத்தி முனையில் மணியை மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.2 ஆயிரத்தை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதுகுறித்து சாயிபாபா காலனி போலீசில் மணி அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.இதில், கால் டாக்சி டிரைவர் மணியிடம் கத்தி முனையில் செல்போன், பணத்தை பறித்து சென்றது கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளி பிரபாகரன் (24), சாயிபாபா காலனி கே.கே.புதூரை சேர்ந்த தொழிலாளி வன்னியராஜ் (32) என்பது தெரியவந்தது.

போலீசார் இருவர் மீதும் வழிப்பறி, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க