• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கதைகள் நன்றாக இருந்தாலே படத்தை தானாக மக்கள் அங்கீகரிப்பார்கள் – நடிகர் அருண் பாண்டியன்

June 30, 2025 தண்டோரா குழு

இன்றைய காலகட்டத்தில் கதைகள் நன்றாக இருந்தாலே படத்தை தானாக மக்கள் அங்கீகரிப்பார்கள் என நடிகரும், தயாரிப்பாளுருமான அருண்பாண்டியன் தெரிவித்தார்.

நடிகர் அருண் பாண்டியன் தயாரித்து அவரது மகள் கீர்த்தி பாண்டியன் கால் டாக்ஸி டிரைவர் கதாப்பாத்திரத்தில் நடித்த “அஃகேனம்”திரைப்படம்,வரும் ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில்,படத்தின் புரோமோஷன் வேலைகள் நடந்து வருகிறது.இதையடுத்து, கோவை அவினாசி சாலையில் உள்ள பிரபல திரையரங்கில் அருண் பாண்டியன், அவரது மகள் கீர்த்தி பாண்டியன்,படத்தின் இயக்குனர்,இசையாமைப்பாளர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் என அனைவரும் புரோமோஷன் நிகழ்ச்சிகாக வந்திருந்தினர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அருண் பாண்டியன் ,

இந்த படத்தை திரையரங்கிற்கு வந்து ரசிகர்கள் கண்டுகளிக்க வேண்டும். தமிழகத்தில் சிறிய படங்களுக்கான திரையரங்கங்கள் கிடைப்பது இல்லை எனக்கூறப்பட்டாலும்,எனது இந்த படத்திற்கு திரையரங்கம் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

நல்ல படங்கள் நிச்சயம் திரையரங்கில் அதிக நாள்கள் ஓடும் எனவும் நீண்ட நாட்களுக்குப்பிறகு டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் நன்றாக ஓடியது எனவே கதைகள் நன்றாக இருந்தாலே மக்கள் தானாக திரையரங்கு வந்து படத்தை அங்கீகரிப்பார்கள் என தெரிவித்தார்.

மேலும் படம் குறித்து பேசிய,கீர்த்தி பாண்டியன் படம் நன்றாக வந்துள்ளது பெண்கள் மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் எனவும் தெரிவித்தார்.மேலும் நல்ல கதைகள் இருந்தால் நானும் அசோக் செல்வனும் நடிப்போம் எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்க