• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கதிராமங்கலம் தடியடி சம்பவத்திற்கு தலைவர்கள் கண்டனம்

July 1, 2017 தண்டோரா குழு

கதிராமங்கலம் கிராமத்தில் மக்கள் மீது போலீசார் நடத்திய தடியடி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தமிழக கட்சிகளை சார்ந்த தலைவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின்எண்ணெய் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்நேற்று காலைஓ.என்.ஜி.சி குழாயில் எண்ணெய் கசிவு ஏற்பட்டது.

எண்ணெய்க் குழாய் கசிவை சரிசெய்ய வந்த அதிகாரிகளை அனுமதிக்க மறுத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.இந்த தடியடி சம்பவத்திற்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“பதற்றத்தையும் போராட்டத்தையும் முடிவுக்குக் கொண்டுவர உதவ வேண்டிய காவல்துறையே அங்கு அடக்குமுறையைக் கட்டவிழ்த்திருப்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.அமைதியாகக் கூடும் மக்கள் மீது ஆயுதப்படைத் தாக்குதல் நடத்துவது அரசியலமைப்புச் சட்டம் மற்றும் மனித உரிமைகளுக்கே எதிரானது. எனவே இத்தகைய சட்டவிரோதச் செயலில் ஈடுபட்ட காவலர்கள் மற்றும் அதற்கு உத்தரவிட்ட அதிகாரிகள் மீது குற்றவியல் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.”என்று தெரிவித்துள்ளார்.

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“மக்களின் நலனைப் புறக்கணித்து விட்டு செயல்படுத்தப்படும் எந்த திட்டமாக இருந்தாலும் அது கண்களை விற்று சித்திரம் வாங்கும் செயலாகவே அமையும். எனவே, கதிராமங்கலத்தில் அமைக்கப்பட்டுள்ள எண்ணெய்க் கிணறுகளை மூடி விட்டு, அங்கிருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வேண்டும். பொதுமக்களை தாக்கிய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், கதிராமங்கலம் பகுதியிலிருந்து காவல்துறையினர் அனைவரையும் உடனடியாக அங்கிருந்து வெளியேற்ற வேண்டும். இல்லாவிட்டால் நானும் கதிராமங்கலம் கிராமத்தில் முகாமிட்டு மக்களுடன் இணைந்து போராடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.

மதிமுக தலைவர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“நெடுவாசல், கதிராமங்கலத்தில் மக்கள் கொந்தளித்து தொடர்ந்து போராட்டங்கள் நடத்திக்கொண்டிருக்கும் நிலையில், தமிழக அரசு தனது நிலைப்பாட்டை உறுதியாக தெரிவிக்க வேண்டும். அதை விடுத்து காவல்துறையை ஏவி அடக்குமுறை தர்பார் நடத்த முற்படுவதும், மக்களை மிரட்டுவதும் ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல.

மக்கள் எழுச்சியை சர்வாதிகார போக்குடன் ஒடுக்கிவிடலாம் என்று கருதுவதும் சரியான அணுகுமுறை அல்ல என்பதை தமிழக அரசு புரிந்துகொள்ள வேண்டும். இல்லையேல் மக்கள் கிளர்ச்சி விசுவரூபம் எடுக்கும்என எச்சரிக்கிறேன்”என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க