• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கணவர் வீட்டில் பேசியபடி நிவாரண தொகை கொடுக்கவில்லை – மனைவி தர்ணா போராட்டம்

August 29, 2019 தண்டோரா குழு

கோவை டாடா பாத் பகுதியில் சுதா என்ற இளம் பெண் தனது கணவர் வீட்டில் பேசியபடி நிவாரண தொகையை கொடுக்காமல் ஏமாற்றி வருவதாகவும், பேசியபடி நிவாரண தொகையினை கொடுக்க கோரி கணவர் வீட்டு வாசலில் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்.

ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியை சேர்ந்தவர் சுதா. எம்.பி.ஏ பட்டதாரியான இவருக்கும் கோவை டாடா பாத் பகுதியை சேர்ந்த ஆடிட்டர் சின்னசாமி என்பவரின் மகன் தயாள் ராஜ்குமாருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது தயாள் ராஜ்குமாருக்கு காதில் மட்டும் பிரச்சினை இருப்பதாக சொல்லி இருந்த நிலையில், திருமணத்திற்கு பின்னர் அவரால் சுயமாக செயல்பட முடியாத நிலை இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, சுதாவிடம் இருந்து விவகாரத்து கேட்டு தயாள் ராஜ்குமார் கோவை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது. இதற்கிடையில், இந்த வழக்கு தொடர்பாக இரு குடும்பத்தினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு , சுதாவிற்கு நிவாரண தொகையாக 3 கோடி ரூபாய் வழங்குவது என பேசி முடிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

சுதாவிற்கு நிவாரண தொகை இன்னும் வழங்காத நிலையில் தயாள் ராஜ்குமாருக்கு அவரது உறவுக்கார பெண் ஒருவரை திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். இந்த தகவல் அறிந்த சுதா நேற்று ஈரோட்டில் இருந்து கோவை வந்து கணவர் வீட்டிற்குள் செல்ல முயன்றுள்ளார். ஆனால் தயாள் ராஜ்குமார் குடும்பத்தினர் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. இதனையடுத்து சுதா தன் கணவர் வீட்டு முன்பு நேற்று நள்இரவு முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தனது கணவருக்கு இருக்கும் குறைபாடுகளை மறைத்து தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொடுத்து விட்டதாக தெரிவிக்கும் சுதா, விவாகரத்திற்கு பேச்சு வார்த்தையில் ஒப்புக்கொண்டதாகவும் , ஆனால் பேசியபடி நிவாரண தொகையை கொடுக்காமல் தன்னை ஏமாற்ற பார்ப்பதாகவும் தெரிவித்தார். பேசியபடி நிவாரண தொகையினை கொடுக்க வேண்டும் எனவும் இல்லையெனில் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை தனது கணவருக்கு வேறு திருமணம் செய்ய கூடாது எனவும், தனக்கு நிவாரண தொகை கிடைக்கும் வரை இந்த வீட்டினை விட்டு செல்லமாட்டேன் என தெரிவித்தார்.

வீட்டிற்குள் தயாள் ராஜ்குமார் குடும்பத்தினர் அனுமதிக்காத நிலையில் வீட்டு வாசலில் சுதா தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றார். அவரது போராட்டத்தை ஏராளமான பொது மக்கள் கூட்டம் கூட்டமாக வேடிக்கை பார்த்தனர். அங்கு வந்த காவல் துறையினர் இரு தரப்பையும் காவல் நிலையத்திற்கு வரும்படி கூறி சென்றனர்.ஆனால் சுதா தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

மேலும் படிக்க