February 20, 2018
தண்டோரா குழு
கட்சி நடத்துவோரிடம் கட்டிப்பிடி வைத்தியம் செய்து வருகிறார் கமல் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
கட்சி தொடங்கும் கமல்ஹாசனுக்கு ஆரம்பத்திலேயே சகுனம் சரியில்லை. அவர் கட்சி நடத்துவோரிடம் கட்டிப்பிடி வைத்தியம் செய்து வருகிறார்.அரசியலுக்காக கமல் நடத்தும் கட்டிப்பிடி வைத்தியம் கேலிக்கூத்தாக இருக்கிறது. கமலின் கட்டிப்பிடி வைத்தியங்கள் விஸ்வரூபம் எடுக்காது. எத்தனை கமல்ஹாசன்கள் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது.
மேலும்,வயதை கருத்தில் கொண்டு நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் இருப்பது நல்லது. ரஜினி வெளிப்படைத்தன்மை கொண்டவர் என்பதால் கமல் அரசியலுக்கு வருவதை வரவேற்றுள்ளார். என்று கூறியுள்ளார்.