May 24, 2018
தண்டோரா குழு
மக்களை பாதுகாக்க வேண்டிய அரசாங்கமே அவர்களின் உயிரைப் பறிப்பதா என்று அரசுக்கு நடிகர் விஜய்சேதுபதி ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்கு இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டையே கொந்தளிக்க வைத்துள்ளது.
இந்த சம்பவத்தை கண்டித்து கட்சி தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகினறனர்.இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி ட்விட்டரில் அவரது கோபத்தை பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
“சட்டமோ அரசாங்கமோ எவையும் மக்களின் நலன் பாதுகாப்புக்காக வேண்டிய அரசாங்கமே மக்களின் உயிர் கொல்லியாக மாறினால் எதற்கு ஒரு அரசாங்கம்” நியாபகம் இருக்கட்டும் கடைசித் தமிழனின் ரத்தம் எழும் வீழாதே என விஜய் சேதுபதி ட்விட்டரில் கூறியுள்ளார்.