• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கடும் வெயிலில் பணி புரியும் காவலர்கள் – தினந்தோறும் பழங்களை கொடுத்து அசத்தும் இளைஞர்கள்

April 21, 2023 தண்டோரா குழு

கோவை மாநகரத்தில் கடும் வெயிலில் பணி செய்யும் போக்குவரத்து காவலர்களுக்கு 400 கிராம் எடை கொண்ட பழங்களை தினந்தோறும் வழங்கி வரும் இளைஞர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் தாக்கம் என்பது அதிகமாகவே காணப்படுகிறது.குறிப்பாக இந்த வெயிலையும் பொருட்படுத்தாமல் கோவை மாநகர பகுதியில் உள்ள சிக்னல்களில் போக்குவரத்துக் காவலர்கள் வெயிலில் நின்று தங்களது பணியை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி படிப்பிற்காக கோவை வந்த இவர் தற்போது படிப்பை முடித்துவிட்டு சாப்ட்வேர் டெவலப் சொந்தமாக செய்து வேலை பார்த்து வருகிறார். சிறு வயதில் இருந்து சமூக சேவை பணியில் ஆர்வம் கொண்ட இவர் புதிய முயற்சியாக வெயிலில் போக்குவரத்தை சீர் செய்து வரும் போக்குவரத்து காவலர்களின் உடலை குளிர வைக்கும் விதமாக கடந்த 90 நாட்களாக கடும் வெயிலில் பணி செய்யும் போக்குவரத்து காவலர்கள் இடத்திற்கே சென்று 400 கிராம் எடை கொண்ட நெல்லிக்காய், தர்ப்பூசணி, அண்ணாச்சி பழம், பப்பாளி, கேரட், வெள்ளரிக்காய், திராட்சை போன்ற பழங்களை ப்ளாஸ்டிக் டப்பாவில் போட்டு போக்குவரத்து காவலர்களுக்கு கொடுத்து வருகிறார்கள்.

இது குறித்து இளைஞர்கள் கூறும் போது,

கடும் வெயிலில் பணிபுரியும் போக்குவரத்து காவலர்கள் 90 பேருக்கு இந்த பழங்கள் கொடுத்து வருகிறோம். எனது நண்பர்கள் 10 பேரும் உதவி செய்வார்கள் நாள் ஒன்றுக்கு 1500 ரூபாய் செலவாகும் யாரிடமும் நாங்கள் பணம் கேட்பதில்லை எங்களுடைய நண்பர்கள் மூலமாக உதவி செய்து வருகிறோம்,காவலர்களுக்கென ஒரு நாளைக்கு 4மணி நேரம் இதற்காக செல்வழிப்பதாக தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் வந்தாலும் இது போல் ஒரு சேவையை மேற்கொண்டால் தம்மை பார்த்து மற்றவர்களும் சேவை பணியை தொடர்வார்கள் என நம்பிக்கையோடு பணியை மேற்கொள்வதாக தெரிவித்தார். படிப்பிற்காக வந்த இளைஞர் ஒருவர் தன்னுடைய நண்பர்களை இணைத்து தன்னலமற்ற சேவை பணியை செய்து வரும் இவர்களுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.இவர்களது சேவையை பாராட்டி கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கார்த்திக்கை அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க