April 21, 2018
தண்டோரா குழு
தென் தமிழகத்தில் இன்றும்,நாளையும் கடலில் பல அடி உயரத்துக்கு அலைகள் ஆர்ப்பரிக்கும் இதனால் மீனவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று வருவாய் நிர்வாக ஆணையர்
சத்யகோபால் தெரிவித்துள்ளார்.
கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்ற அறிவிப்பால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும்,மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும்,அரசு வெளியிடும் அறிவிப்புகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது