April 25, 2018
தண்டோரா குழு
தென் தமிழக கடலோர பகுதிகளில் கடல்சீற்றம் நிலவி வருவதால், அலைகள் 2மீ வரை உயரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெவ்வேறு திசைகளில் இருந்து காற்று வீசுவதாலும், வெப்பச்சலனத்தாலும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்,தமிழகத்தின் உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
மேலும்,கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் தமிழக மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்ல வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.