• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 2,000 மீனவர்களை காணவில்லை என கன்னியாகுமரி மீனவர்கள் புகார்

December 2, 2017 தண்டோரா குழு

கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 2,000 மீனவர்களை காணவில்லை என கன்னியாகுமரி மீனவர்கள் புகார் தெரிவுத்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் வழக்கம் போல் கன்னியாகுமரி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது ஒகி புயல் வீசியதால் அவர்கள் கடலில் சிக்கிக்கொண்டனர். இதற்கிடையில், கிட்டத்தட்ட புயல் குறித்த முன்னறிவிப்பு ஏதும் இல்லாத காரணத்தினால் கடலில் மாட்டிகொண்ட அவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கிட்டதட்ட 2000 மீனவர்கள் கடலில் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, குமரி மாவட்டத்தில் இருந்து, விசைப்படகு மூலம் மீன்பிடிக்க சென்ற மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசின் உதவியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரியுள்ளார். மீனவர்கள் மீட்பு நடவடிக்கையில் மத்திய உள்துறை அமைச்சகம் கூடுதல் படைகளை அனுப்பி வைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் வலியுறுத்தினார்.

மேலும், 737 மீனவர்கள் பத்திரமாக இருக்கிறார்கள் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். ஆனால் அமைச்சர் கூறுவது தவறான தகவல் என மீனவ குடும்பத்தினர் மறுத்துள்ளனர். சின்னத்துறை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 2 ஆயிரம் பேர் கடலுக்குள் சென்றுள்ளனர். இதில் ஒருவர் கூட திரும்பவில்லை எனக் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க