• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கடனை திருப்பி கேட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது !

May 18, 2019 தண்டோரா குழு

கொடைக்கானலில் கடனை திருப்பி கேட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோ எடுத்தும் மிரட்டியுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

கொடைக்கானலை சேந்தவர் சசிகுமார் (வயது 30). அதே காம்ப்ளக்சில் உள்ள கவரிங் கடையில் அப்சர்வேட்டரியைச் சேர்ந்த புஷ்பா (25) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் வேலை பார்த்து வந்தார். சசிக்கு புஷ்பா அவ்வப்போது பணம் கடன் கொடுத்துள்ளார். ஆனால் வாங்கிய கடனை திருப்பி கொடுக்காத சசி, மீண்டும் மீண்டும் புஷ்பாவிடம் பணம் கேட்டுள்ளார்.

சம்பவத்தன்று சசிகுமாரின் கடை அடைக்கப்பட்டு இருந்ததால் புஷ்பா அவருக்கு போன் செய்தார். அப்போது தான் பணம் தயார் செய்து விட்டதாகவும் வத்தலக்குண்டுவில் இருப்பதாகவும சசிகுமார் கூறியுள்ளார். அதனை நம்பி அவர் வத்தலக்குண்டு சென்றுள்ளார். அங்கு அவரை பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோவும் எடுத்து மிரட்டியுள்ளார். ஆனால் இந்த மிரட்டலுக்கு பயப்படாத ரோஜா, காவல்துறையில் புகார் செய்ய, சசியை போலீசார் கைது செய்துள்ளார். இதையடுத்து, சசி மீது போலீசார் பாலியல் வன்கொடுமை, பெண்ணை அவமதித்தல், தொழில் நுட்பங்களை தவறாக பயன்படுத்துதல் போன்ற
பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ஆபாச புகைப்படங்களையும் பறிமுதல் செய்து அழித்தனர்.

மேலும் படிக்க