• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கடந்த 4 நாட்களில் ரூ 602 கோடிக்கு மது விற்பனை – டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு!

November 7, 2018 தண்டோரா குழு

கடந்த 4 நாட்களில் ரூ 602 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தீபாவளி என்றாலே பட்டாசு விற்பனையுடன் சேர்த்து மது விற்பனையும் ஜோராக இருக்கும். ஆண்டுக்கு ஆண்டு மது விற்பனை கூடிக்கொண்டேயிருக்கிறதே தவிர, குறைந்தபாடில்லை. அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையையொட்டி டாஸ்மாக் மது விற்பனை 320 கோடி ரூபாய் இலக்காக நிர்ணயிக்கப் பட்டிருந்தது. இதையடுத்து, நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளிப் பண்டிகையையொட்டி தொடர்ந்து 4 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டதால், விற்பனையின் அளவு அதிகரித்திருப்பதாக டாஸ்மாக் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். கடந்த 4 நாட்களில் ரூ 602 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. அதன்படி சனி – ரூ 124 கோடி, ஞாயிறு – ரூ 150 கோடி, திங்கள் ரூ 148 கோடி, தீபாவளி நாளான நேற்று ரூ 180 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

மேலும், கடந்த ஆண்டைப் பொறுத்தவரை அக்டோபர் 18-ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட்டது. அன்றய தினமும் அதற்கு முந்தைய தினமும் மொத்தமாக 536 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியிருந்தது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு 34% கூடுதலாக மது விற்பனை அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க