• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கடந்த சில நாட்களுக்கு மேலாக நம்பர் இல்லாமல் செல்லும் மேயர் கார்

September 5, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி மேயர் கல்பனா, பதிவு எண் இல்லாமல் அரசு வாகனத்தினை கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பயன்படுத்தி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகராட்சி மேயராக இருப்பவர் கல்பனா. இவருக்கு சமீபத்தில் மாநாகராட்சியில் இருந்து புதிய இன்னோவா வாகனம் வாங்கப்பட்டுள்ளது. இந்த புதிய வாகனத்திற்கு பதிவு எண் வாங்காமல் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பயன்படுத்த பட்டு வருகின்றது. இன்று கோவை மத்திய சிறையில் நடைபெற்ற வ.உ.சி 151 வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்கவும் பதிவு எண் இல்லாத காரையே மேயர் கல்பனா பயன்படுத்தினார்.

பதிவு எண் இல்லாமல் வாகனங்கள் இயக்குவது மோட்டார் வாகனசட்டப்படி தவறு என்கின்ற நிலையில் மக்கள் பிரதிநிதியே ஒரு வாரத்திற்கும் மேலாக பதிவு எண் இல்லாத வாகனத்தை பயன்படுத்தி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது , வாகனம் வாங்கியவுடன் போக்குவரத்து துறையில் பதிவு செய்யப்பட்டு விட்டதாகவும், நம்பர் பிளேட் போக்குவரத்து துறையில் இருந்து வந்தவுடன் உடனடியாக பொறுத்தப்படும் எனவும் தெரிவித்தனர்.

மேலும் படிக்க