• Download mobile app
15 Aug 2025, FridayEdition - 3474
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கடந்த ஆட்சியில் அனைத்து துறைகளிலும் முறைகேடு நடந்துள்ளது – ஈ.ஆர்.ஈஸ்வரன்

November 28, 2021 தண்டோரா குழு

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் கோவை மாவட்டத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கலந்துகொண்டுள்ளார்.

தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் ஈஸ்வரன் கூறும்போது :-

விமான நிலைய விரிவாக்கப் பணியை தமிழக முதல்வர் வேகப்படுத்தியுள்ளார்.கோவையில் வளர்ச்சித் திட்டங்களை நாங்கள் அமைச்சரிடம் மனுவாக கொடுத்துள்ளோம். அமைச்சர் வாக்குறுதி கொடுத்துள்ளார்.

கடந்த ஆட்சியில் அனைத்து துறைகளிலும் முறைகேடு நடந்துள்ளது. காவல்துறை இதற்காக நடவடிக்கை எடுத்துக் கொண்டு வருகிறது. கைது செய்யப்பட வேண்டியவர்கள் கண்டிப்பாக கைது செய்யப்படுவார்கள்.

அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது :

கோவை வளர்ச்சி திட்டங்கள் குறித்து 16 பக்க கோரிக்கைகள் என்னிடம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கைகளை தமிழக முதல்வரின் கரங்களில் ஒப்படைக்கப்படும். அவர் இந்த கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றுவார்.

தொடர்ந்து எஸ்.பி வேலுமணி எந்தெந்த சாலைப் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. எந்தெந்த சாலைகளுக்கு திட்ட மதிப்பீடு வழங்கப்பட்டது, அதன் வேலை உத்தரவு, வேலை தொடக்கம் ஆகிவற்றின் பட்டியலை தெளிவாக வெளியிடட்டும்.

நிர்வாக அனுமதி பெறாமல், டெண்டர் விடாமல் தேர்தலுக்காக மக்களை ஏமாற்ற வேண்டும் என்பதற்காக அந்த சாலை பணிகள் துவங்கப்பட்டது.நிதி ஆதாரங்கள் இல்லாமல் தொடங்கப்பட்ட பட்டியலை இரண்டு நாட்களுக்குள் வெளியிடட்டும்.கோவை மாநகராட்சியின் நிதிநிலை மோசமாக உள்ளது.

சாலை பணிகள் குறித்து வேலுமணியின் குற்றச்சாட்டை ஆராய்ந்து பார்த்தோம் அது போன்று ஒன்றும் இல்லை.அவர் தொடங்கியதாக சொல்லும் பணி தேர்தலுக்காக தொடங்கபட்ட பணி.300 பணி என்று சொல்பவர் பட்டியல் வெளியிட்டிருக்கலாம். என தெரிவித்தார்.

மேலும் படிக்க