நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நீர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தங்க நகை வியாபாரிகள், தயாரிப்பாளர்களிடையே பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.
தமிழகத்தில் சென்னை, மதுரை மற்றும் கோவை மாவட்டத்தில் தான் அதிக அளவில் தங்க நகைகள் தயாரிக்கப்படுகின்றன. கோவை மாவட்டத்தில் தங்க நகை கடைகள் பெரிய கடைகள் 50 மற்றும் சிறிய கடைகள் 300 உள்ளது. தமிழகத்தை சேர்ந்த பொற்கொல்லர்கள் 30 ஆயிரம் பேரும், வடமாநில பொற்கொல்லர்கள் 15 ஆயிரம் பேரும் நகைப்பட்டறைகள் அமைத்து பணி புரிந்து வருகிறார்கள். கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக கடைகள் மூடப்பட்டதால் விற்பனை இல்லாமல், தயாரிப்பு இல்லாமல் தங்க நகை கடைகள் முடங்கியது.
தற்போது தான் மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. இதனிடையே தங்கம் மீதான இறக்குமதி வரி அதிகரிப்பு நகை வியாபாரிகள், தயாரிப்பாளர்களிடையே பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.
இதுகுறித்து கோவை மாவட்ட தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முத்து வெங்கட்ராம் கூறுகையில்,
‘‘தமிழகம் முழுவதும் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நகை தயாரிப்பை நம்பி உள்ளனர். கோவையில் மட்டும் 1 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். இறக்குமதி வரி குறைக்கப்பட வேண்டும். கச்சா தங்கம் என சொல்லக்கூடிய சுத்திகரிக்கப்படாத தங்கத்தை வங்கிகளே இறக்குமதி செய்து வியாபாரிகளிடம் தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஒன்றிய அரசிடம் வழங்கி இருந்தோம்.
எங்கள் கோரிக்கைகள் எதுவுமே செவிசாய்க்கப்படவில்லை. தங்கம் தொடர்பான தொழில் வளர நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வாடிக்கையாளர்கள் மேலும் பாதிப்படைவார்கள். தங்கம் மீதான இறக்குமதி வரி அதிகரிப்பால் கடத்தல் தங்கம் அதிகரிக்கும். பல லட்சம் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும்’’என்றார்.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது