November 19, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்ததாக தேனி மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார் (வயது 21) கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கிருஷ்ணகுமார் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதால் அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் எஸ்.பி செல்வநாகரத்தினம் கோவை மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதை தொடர்ந்து ஆட்சியர் சமீரன், கஞ்சா வியாபாரி கிருஷ்ணகுமாரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு நகலை சிறையிலுள்ள கிருஷ்ணகுமாரிடம் போலீசார் வழங்கினர்.