• Download mobile app
13 Nov 2025, ThursdayEdition - 3564
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கஞ்சா விற்பனை : கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் கைது

December 27, 2021 தண்டோரா குழு

கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை திருச்சி ரோடு சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சிங்காநல்லூர் போலீசார் நேற்று அப்பகுதிகளில் ரோந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை பார்த்ததும் 2 வாலிபர்கள் தப்பி ஓட முயன்றனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர்.

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒண்டிப்புதூர் சிவலிங்கபுரத்தை சேர்ந்த தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படிக்கும் தரணிதரன்(19), சூர்யாநகரை சேர்ந்த சாம்(20) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 500கிராம் கஞ்சா, ரூ.2,300 மற்றும் ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க