• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கஜா புயல் பாதித்த பகுதியை சேர்ந்த எஸ்.ஆர்.எம் பல்கலை மாணவர்களுக்கு கல்விக்கட்டணத்தில் விலக்கு – பாரிவேந்தர்

November 24, 2018 தண்டோரா குழு

கஜா புயல் பாதிப்புக்குள்ளான பகுதிகளை சேர்ந்த எஸ்.ஆர்.எம் பல்கலை மாணவ, மாணவிகள் 650 பேருக்கு கல்விக்கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என எஸ்.ஆர்.எம் குழுமத்தின் தலைவர் பாரிவேந்தர் அறிவித்துள்ளார்.

கஜா புயலின் கோர தாண்டவத்தால் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம், திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, கரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்தது. தென்னை, வாழை, நெல் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் அனைத்தும் சேதம் அடைந்தது. சுமார் 45 லட்சம் தென்னை மரங்கள் சூறைக்காற்றில் வேரோடு முறிந்து விழுந்துள்ளன. புயல் தாக்கி ஒரு வாரம் ஆனா நிலையில் தற்போதும் மீட்பு பணிகள் மற்றும் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் நன்கொடைகள் நாடெங்கிளும் இருந்து பல்வேறு உதவிகள் வந்து வண்ணம் உள்ளன, அதன்படி தனியார் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள், தனிநபர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினர் தங்களால் முடிந்த உதவிகளை தமிழக அரசின் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு நன்கொடைகள் மூலம் உதவி செய்து வருகிறார்கள்.

இதனை தொடர்ந்து புதுகோட்டையில் இன்று புயல் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்ட பாரிவேந்தர் எஸ்.ஆர்.எம் குழுமத்தின் சார்பாக செய்துவரும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்,.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

கஜா புயல் பாதித்த 4 மாவட்டங்களைச் சேர்ந்த 650 மாணவ, மாணவிகள் எஸ்ஆர்எம் குழு பல்கலைக்கழகத்தில் பயின்று வருகின்றனர். இவர்களால் இதற்கு மேல் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாது என்பதால், அவர்கள் கல்வியை முடிக்கும் வரை கல்விக் கட்டணம் வசூலிக்கப்படாது. அதற்கு பதிலாக 650 மாணவர்களின் ஒட்டுமொத்த கல்விக் கட்டணமான ரூ.48 கோடியை பல்கலைக்கழகமே ஏற்கும். மேலும், கஜா புயல் பாதித்த பகுதிகளில் தென்னந்தோப்புகளை இழந்த விவசாயிகளுக்கு 25 ஆயிரம் தென்னங்கன்றுகள் வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார்.

மேலும் படிக்க