• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கஜா புயலால் வீடிழந்த மக்கள் தற்காலிகமாக கூரை அமைக்க தார்ப்பாய் – முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

November 23, 2018 தண்டோரா குழு

கஜா புயலால் வீடிழந்த மக்கள் தற்காலிகமாக கூரை அமைக்க தார்ப்பாய் வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் ‘கஜா’ புயல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. கஜா புயலின் கோர தாண்டவத்தால் டெல்டா மாவட்டங்கள் கடும் சேதங்களை சந்தித்து. உயிர் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதித்து உள்ளது. இப்புயலில் காரணாக லட்சகணக்கானவர்கள் வீடிழந்து உள்ளனர். இதற்கிடையில், தொடர்ந்து அந்த பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் வீடிழந்தவர்கள் தங்குவதற்கு தற்காலிகமாக கூரை அமைக்க தார்பாய் வழங்க கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், கஜா புயலால் வீடிழந்த மக்கள் தற்காலிகமாக கூரை அமைத்து தங்குவதற்கு தார்ப்பாய் வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,

”கடந்த 16.11.2018 அன்று அதிகாலை அதி தீவிர ‘கஜா’ புயல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கரை கடந்தது. இந்த அதிதீவிர புயலினால் டெல்டா மாவட்டங்கள் உள்பட 12 மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாயின. அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்ததன் காரணமாக, பெருமளவு உயிர்ச் சேதங்கள் தவிர்க்கப்பட்டது. எனினும், புயலின் கடுமையான தாக்கத்தால் வீடுகள், பயிர்கள், மரங்கள், மின்கம்பங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மிக அதிக அளவில் சேதம் அடைந்தன. ‘கஜா’ புயல் கரையினை கடப்பதற்கு முன்பும், கடந்த பின்னரும், பல்வேறு நிவாரண முகாம்களில் பாதிக்கப்பட்டோர் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு உணவு, பாதுகாக்கப்பட்ட குடிநீர், பால், வேட்டி, சேலை, பாய், போர்வை போன்ற வசதிகளும், சுகாதார மற்றும் மருத்துவ வசதிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.

‘கஜா’ புயல் மற்றும் கன மழையின் தாக்கத்தினால் முழுவதும் சேதமடைந்த குடிசை வீடு ஒன்றுக்கு 10,000 ரூபாயும், பகுதி சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு 4,100 ரூபாயும் வழங்க நான் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளேன். முழுவதும் சேதமடைந்த குடிசைகளுக்கும், வீடுகளுக்கும் பதிலாக தகுதி வாய்ந்த நபர்களுக்கு புதியதாக வீடு கட்ட உரிய நிதி உதவி வழங்கப்படும் எனவும் நான் ஏற்கனவே அறிவித்திருந்தேன். பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெரும்பாலான வீடுகளின் கூரைகள் சேதம் அடைந்துள்ளன. தற்போது பெய்துவரும் வடகிழக்கு பருவ மழையிலிருந்து வீடுகளை பாதுகாப்பதற்கு ஏதுவாக கூரை மேல் தற்காலிகமாக போடுவதற்கு தார்ப்பாய் ஷீட்டுகள் அளித்தால் உதவிகரமாக இருக்கும் என்று பல்வேறு தரப்பினரிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

எனவே, ஏழை, எளிய மக்களின் நலனில் அக்கறை கொண்டு, கூரைகள் பாதிக்கப்பட்ட வீடுகளில் தற்காலிகமாக கூரை அமைத்துக் கொள்ள தார்ப்பாய் ஷீட்டுகளை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக வாங்கி, உடனடியாக வழங்க சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க