• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கஜா புயலால் பாதித்த பகுதிகளுக்கு 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்குவதாக விஜய் சேதுபதி அறிவிப்பு

November 19, 2018 தண்டோரா குழு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்குவதாக நடிகர் விஜய் சேதுபதி அறிவித்துள்ளார்.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியது கஜா புயல். இந்த கஜா புயல் நாகை – வேதாரண்யம் இடையே கரையை கடந்தது. கஜா புயலின் கோரத்தாண்டவத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இப்புயலின் தாக்கத்தால் 1 லட்சத்து 70 ஆயிரம் மரங்களும்,1 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்து இருக்கின்றன. புயல் சேதத்தை மதிப்பிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதையடுத்து, புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் தங்களால் ஆன உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக25 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க