• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கக சாவடி அம்மன் டிரஸ்ட் சார்பில் வீடு தேடி உணவு

April 7, 2020 தண்டோரா குழு

கடந்த 25ந் தேதி முதல் கோவை கந்தே கவுண்டன் சாவடி மாகாளி அம்மன் நிர்வாக குழு மற்றும் அம்மன் டிரஸ்ட் க.க.சாவடி சார்பில் தினசரி வறுமையில் வாடும்150 முதியவர்களுக்கு வீடு தேடி சென்று சுகாதார முறையில் தயாரிக்கப்பட்ட மதிய உணவு,முட்டை வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு, அவர்கள் தினசரி பயன்படுத்தும் மருந்துகள் டிரஸ்ட் மூலம் வாங்கி தரப்படுகிறது.இந்த பணி ஊரடங்கு முடியும் வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கோவை நவக்கரை AVP நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் கபசுர கஷாயம் க.க.சாவடி பகுதியில் ஒவ்வொரு வீடாக வரும் வியாழன் அன்று அம்மன் டிரஸ்ட் மூலம் வழங்கப்பட உள்ளது.இந்த பணி ஊரடங்கு முடியும் வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவையினை அம்மன் டிரஸ்ட் நிர்வாகிகள் எஸ்.மோகன் குமார் Vao Retd சி.அய்யாசாமி சிறைத்துறை ஓய்வு கே.சண்முகசுந்தரம் வே.விஸ்வநாதன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க