May 29, 2021
தண்டோரா குழு
கேரளாவின் மிக உயரிய இலக்கிய விருதான ஓஎன்வி விருது இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்துவிற்கு வழங்கப்படுவதாக ஓ. என்.வி கல்சுரல் அகாடமி அறிவித்தது. இதற்கிடையில், இதற்கு நடிகை பார்வதி, பாடகி சின்மயி உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, விருதை மறுபரிசீலனை செய்வதாக ஓ. என்.வி கல்சுரல் அகாடமி அறிவித்தது.
இந்நிலையில், ஓஎன்வி விருதை திருப்பி அளிக்கப்பதாக கவிஞர் வைரமுத்து அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கேரளாவின் மிக உயரிய இலக்கிய விருதான ஓஎன்வி விருதை திருப்பி அளிக்கிறேன். சர்ச்சைகளுக்கு இடையே இந்த விருதை பெறுவதை தவிர்க்க விரும்புகிறேன்.
எனக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட பரிசுத்தொகை ரூ.3 லட்சத்தை கேரள
முதல்வரின் நிவாரண நிதிக்கு அளியுங்கள். விருது மறுபரிசீலனைக்கு காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலரது குறுக்கீடே காரணம்.
நான் மிக மிக உண்மையாக இருக்கிறேன். என் உண்மையை யாரும் உரசிப்பார்க்கத் தேவையில்லை என கூறியுள்ளார்.