June 6, 2018
தண்டோரா குழு
தூத்துக்குடியில் தற்போது தற்காலிகமாக தான் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதாகவும் ஓரிரு மாதங்களில் மீண்டும் திறக்கப்படும் என்றும் ஸ்டெர்லைட் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத் கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மாதம் 22-ந்தேதி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.அப்போது போலீசார் நடத்தியதுப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.மேலும்,65-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.இதையடுத்து, 22 ஆண்டுகளாக இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில்,டெல்லியில் ஸ்டெர்லைட் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர்,தூத்துக்குடி கலவரத்திற்கு சமூக விரோதிகளும்,தொண்டு நிறுவனங்களும் தான் காரணம்.ஆலையை மீண்டும் திறக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஓரிரு மாதங்களில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும்.தூத்துக்குடியில் அமைதி திரும்ப காத்திருக்கிறோம் எனkக் கூறினார்.