• Download mobile app
20 Aug 2025, WednesdayEdition - 3479
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஓரணியில் போட்டியிடும் எதிர் எதிர் துருவங்கள்.

April 4, 2016 வெங்கி சதீஷ்

அ.தி.மு.க வேட்பாளர் பட்டியல் வெளியானது முதலே பல்வேறு சர்ச்சைகளைச் சந்தித்து வருகிறது. சேலத்தில் வேட்பாளர் மாற்றியதைக் கண்டித்து ஒரு பெண் தீக்குளிக்க முயன்றார். மேலும் பெண் வேட்பாளர்கள் வெறும் 13 சதவிகிதம் மட்டுமே உள்ளனர்.

இந்நிலையில் தற்போது தென்னிந்திய நடிகர்கள் சங்க தேர்தலின் பொது எதிரும் புதிருமாக இருந்த சரத்குமார் மற்றும் கருணாஸ் ஒரே சின்னத்தில் போட்டியிடுவது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சரத்குமார் கடந்த தேர்தலின் பொது அ.தி.மு.க வுடன் இணைந்து போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

இந்நிலையில் அவரது கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர் பிரிந்து சென்று புதிய கட்சி தொடங்க உள்ளார் என்ற செய்தியை அடுத்து
அவர் கூட்டணியில் இருந்து வெளியேறினார். பின்னர் தி.மு.க மற்றும் பா.ஜ.க வுடன் கூட்டணியமைக்க முற்பட்ட போதும் யாரும் இவரைக் கண்டுகொள்ளவில்லை. எனவே மீண்டும் அ.தி.மு.கவிற்கே திரும்பினார். இதனிடையே இவர் மீது கடந்த காலங்களில் தென்னிந்திய நடிகர்சங்க தலைவராக இருந்தபோது பொது நிதியைக் கையாடல் செய்ததாகப் புகார் கொடுக்கப்பட்டது. இதற்கு தற்போதைய நிர்வாகிகள்தான் காரணம் எனக் குற்றம் சாட்டி வந்தார்.

அதில் நடிகர் கருணாசும் காரணமாக இருந்தார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் தனது கட்சியினருடன் சென்று முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தது ஆதரவு தெரிவித்த கருணாசுக்கு ஒரு சட்டமன்ற தொகுதி ஒதுக்கியுள்ளார். இதனால் ஒரே சின்னத்தில் இருவரும் தேர்தலை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நடிகர் சங்க தேர்தல் பொது எதிரும் புதிருமாக பணியாற்றிய இருவர் தற்போது ஒரே சின்னத்தில் ஒன்றாகப் பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருப்பது முரண்பாடானது.

மேலும் படிக்க