July 5, 2018
தண்டோரா குழு
கோவையில் ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளைக் வலியுறுத்தி,கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகம் முழுவதும் ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளைக் வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு குறைந்தபட்சம் பென்சனாக ரூ 7850 வழங்க வேண்டும்,மருத்துவப்படி ரூ 300 வழங்குவது மட்டுமல்லாமல் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும், பொங்கல் போனஸ் மற்றும் இலவச பஸ்பாஸ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளைக் வலியுறுத்தி ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன் வாடி ஊழியர்கள் மடியேந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும்,பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் தங்களைக் அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை என்றும் தற்போது மாதம் வழங்குகின்ற இந்த 2000 ரூபாய் பென்சன்,வயதான காலத்தில் தங்களின் மருத்துவ செலவுகளுக்கு கூட போதாது என தெரிவித்தனர்.எங்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை என்றால் மாநில தழுவிய தொடர் போராட்டங்களைக் நாங்கள் முன்னெடுப்போம் என தெரிவித்தனர்.