October 5, 2018
தண்டோரா குழு
ஓபிஎஸ் – தினகரன் சந்திப்பு மகிழ்ச்சி அளிப்பதாக சூலூர் அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் கூறியுள்ளார்.
அதிமுகவிலிருந்து டிடிவி தினகரன் ஒதுக்கப்பட்டவுடன் தனியாக பிரிந்து அமமுக கட்சி ஆரம்பித்து அதிமுகவுக்கு சவாலாக விளங்கிவருகிறார். இதற்கிடையில் டிடிவி தினாகரனை ஓபிஎஸ் சந்தித்தார் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ் செல்வன் கூறியுள்ள கருத்து பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதனை தினகரனும் உறுதி செய்துள்ளார். இது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இந்நிலையில், கோவை சூலூர் அதிமுக அதிமுக எம்.எல்.ஏ. கனகராஜ் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.
அவர் பேசுகையில்,
ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் சந்தித்தது தொண்டர்களாகிய எங்களுக்கெல்லாம் மிகப்பெரிய உற்சாகமாக இருக்கிறது, அவர்கள் சேர்ந்தால்தான் இந்த ஆட்சியை காப்பாற்ற முடியும். குருபெயர்ச்சி வந்தவுடன் அதிமுகவிற்கு நல்ல காலம் பிறந்து உள்ளது. எல்லாரும் விட்டுக் கொடுத்து ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வரவேண்டும் எனக் கூறியுள்ளார்.