• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஓபிஎஸ் தாக்கல் செய்த தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன ?

February 8, 2019 தண்டோரா குழு

தமிழக சட்டப்பேரவையில் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால், இந்த ஆண்டு ஏப்ரலில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தமிழக அரசின் பட்ஜெட்டை முன்கூட்டியே தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. காலை 10 மணிக்கு பேரவையில் பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் செய்தார்.

தமிழக பட்ஜெட் 2019-2020 முக்கிய அம்சங்கள் என்னேனே ?

விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்
தமிழகத்தில் தனிநபர் வருமானம் ரூ.1,42,267 ஆக உயர்வு
மக்கள் பங்களிப்புடன் ஏரிகளை புணரமைக்க ரூ.300 கோடி
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.1 சதவீதமாக இருக்கும் என மதிப்பீடு
புதுமை வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு
நடப்பாண்டில் வரி வருவாய் 14 சதவீதம் அதிகரிக்கும் என எதிரப்பார்ப்பு
நடப்பாண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.14,315 கோடி
நகராட்சித்துறை, குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.18,700 கோடி ஒதுக்கீடு
2018-19-ல் தமிழக அரசு வாங்கிய 44,066.82 கோடி
தமிழக அரசின் கடன் ரூ.3 லட்சத்து 97 ஆயிரத்து 495 கோடியாக உயர்வு
2019-20-ல் தமிழக அரசு ரூ.43,000 கோடி கடன் வாங்க திட்டம்
கடந்த ஆண்டை விட தமிழக அரசின் கடன் இந்த ஆண்டு 42 ஆயிரம் கோடி அதிகம்
சென்னையில் ஆற்றோரம் வசிப்போருக்கு 38,000 வீடுகள் கட்ட திட்டம்
உலக வங்கி உதவியுடன் 4,647 கோடி ரூபாயில் வீடுகள் கட்டப்படும்
மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கடன் ரூ.22,815 கோடி
அரசின் நிதி பற்றாக்குறை 3 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது
ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் பெயரில் அரசு கலை, அறிவியல் கல்லூரி கட்டப்படும்
கஜா புயல் நிவாரணமாக ரூ.2,361.41 கோடி வழங்கப்பட்டு்ளது
ஜெர்மன் வங்கி உதவியுடன் 2,000 பேட்டரி பேருந்துகள் வாங்கி இயக்கப்படும்
சென்னை, கோயம்புத்தூர், மதுரையில் முதல்கட்டமாக 500 பேருந்துகள்
சென்னை மெட்ரோ ரயில் மாதவரம் – கோயம்பேடு – சோழிங்கநல்லூர் திட்டத்திற்கு ஜப்பான் நிதியுதவி
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை தலைமையாக கொண்டு புதிய வருவாய் கோட்டம்
கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம் விரைவில் உருவக்கப்படும்
ரூ.2,000 கோடியில் சென்னையில் வாகன நிறுத்த மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும்
அத்திக்கடவு – அவிநாசி திட்டத்துக்கு ரூ.1000 ஒதுக்கீடு
ரூ.1,125 கோடியில் தேனி, சேலம், ஈரோட்டில் 250 மெகாவாட் மிதக்கும் சூரிய திட்டம்
ரூ.2,350 கோடியில் 500 மெகாவாட் கடலாடி, மிக உய்ய சூரிய பூங்கா திட்டம்
முதியோர் உதவித்தொகை, இலவச வேட்டி, வேலை உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு ரூ.3,958 கோடி ஒதுக்கீடு
ரூ.284 கோடி மதிப்பில் வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்
ஸ்ரீபெரும்புதூர் ஒரத்தூரில் அடையாறு உபநதியில் நீர்த்தேக்கம் அமைக்கப்படும்

குறிஞ்சிப்பாடி வட்டத்தில் பரவனாற்று படுகை மறு சீரமைக்கப்படும்
சிதம்பரம் வட்டம் பேரம்பட்டு அருகே கொள்ளிடம் ஆற்றில் வெள்ளத்தடுப்பு நீரொழுங்கி கட்டப்படும்
பிச்சாவரம் அருகே உப்பனாற்றின் குறுக்கே நீரொழுங்கி அமைக்கப்படும்
நில ஆதாரங்களை முறையாக திறம்பட பயன்படுத்த மாநில நலப்பயன்பாட்டு கொள்கை வடிவமைக்கப்படும்
ஒன்றரை லட்சம் குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா
தேசிய ஊராக வாழ்வாதார திட்டத்துக்கு ரூ.349.4 கோடி ஒதுக்கீடு
வீட்டு வசதி, நகர்ப்புற மேம்பாட்டுத்துறைக்கு ரூ.6,265.5 கோடி ஒதுக்கீடு
ஊரக குறுந்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க ரூ.172 கோடி ஒதுக்கீடு
வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு மொத்தம் ரூ.1,031.5 கோடி ஒதுக்கீடு
2019-20-ம் ஆண்டில் சாலை மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.1,142 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் 7,896-ல் இருந்து 5,198 ஆக குறைப்பு
தமிழகத்தில் 2,698 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக அரசு பட்ஜெட்டில் தகவல்
2019-20-ம் நிதியாண்டில் விவசாயிகளுக்கு 2,000 சூரிய பம்ப் செட்டுகள் வழகங்ப்படும்
ரயில்வே மேம்பால பணிகளுக்கு வரும் ஆண்டில் ரூ.726.6 கோடி ஒதுக்கீடு
மானிய விலை இருசக்கர வாகனத் திட்டத்திற்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.54.76 கோடி ஒதுக்கீடு
கைத்தறி உதவி திட்டத்திற்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு

பல்வேறு திருமண நிதியுதவி திட்டங்களுக்காக 726.32கோடி ஒதுக்கீடு
நெசவாளர் கூட்டுறவு சங்க மானியங்களுக்காக 150 கோடி ஒதுக்கீடு
கைத்தறி மற்றும் துணி நூல் துறைக்கு 1170.56 கோடி ஒதுக்கீடு
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க 148.83 கோடி ஒதுக்கீடு
சுற்றுலா திட்டங்களை மேம்படுத்த ரூ 100 கோடி ஒதுக்கீடு
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் ரூ 43.39 கோடியில் திருக்கோயில் திருப்பணிகள்
முதலீட்டாளர் மாநாடு மூலம் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு ரூ.32,206 கோடி ஒதுக்கீடு
திருமுடிவாக்கம், ஆலத்தூர் தொழிற்பேட்டைகள் விரிவுபடுத்தப்படும்
குறு, சிறு நடுத்தர தொழிற்துறைக்கு ரூ.476 கோடி ஒதுக்கீடு
தகவல் தொழில்நுட்ப துறைக்கு ரூ.141 கோடி ஒதுக்கீடு
தொல்லியல் துறைக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு
சத்துணவு திட்டத்துக்கு வரும் ஆண்டில் ரூ.1,772.12 கோடி ஓதுக்கீடு
சமூக நலத்துறைக்கு மொத்தமாக ரூ.5,305.5 கோடி ஒதுக்கீடு
மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு பட்ஜெட்டில் ரூ.572.19 கோடி ஒதுக்கீடு
அரசு உழியர்கள் சம்பளம், மற்றும் ஓய்வூதியத்துக்கு ரூ.85,026 கோடி ஒதுக்கீடு
12,524 உராட்சிகளில் விளையாட்டு போட்டிகள் நடத்த ரூ.25 கோடி ஒதுக்கீடு
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக்கு ரூ.168 கோடி ஒதுக்கீடு
ஆதி திராவிட, பழங்குடியின மாணவர்களுக்காக மேலும் 20 விடுதிகள் கட்ட ரூ.40 கோடி
ஆதி திராவிட, பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்க ரூ.71.01 கோடி
ஆதி திராவிட, பழங்குடியின மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கு பட்ஜெட்டில் ரூ.1,857.13 கோடி நிதி ஒதுக்கீடு
2019-20ம் நிதியாண்டில் தமிழக அரசின் வருவாய் ரூ.96,177.14 கோடி
மதுபானங்கள் மீதான ஆயத்தீர்வை வருவாய் ரூ.7,262.33 கோடி
முத்திரைத்தாள், பத்திரப்பதிவு கட்டணம் மூலம் வருவாய் ரூ.13,122.81 கோடி
வாகனங்கள் மீதான வரிகள் மூலம் வருவாய் ரூ.6,510 கோடி
தமிழக அரசின் வரியில்லா வருவாய் ரூ.13,326.9 கோடி
தமிழக அரசின் வருவாய் வரவு ரூ.1,97,721.17 கோடி
தமிழக அரசின் வருவாய் செலவினம் ரூ.2,12,035.93 கோடி
தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.14,314.76 கோடி

மேலும் படிக்க