• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவையில் மல்லிகை உள்பட அனைத்துப் பூக்களின் விலை அதிகரிப்பு

August 20, 2021 தண்டோரா குழு

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவையில் மல்லிகை உள்பட அனைத்துப் பூக்களின் விலையும் அதிகரித்துள்ளதாகவும்,கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளதாக கோவையில் மலர் வியாபரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை பூ மாா்க்கெட்டுக்கு சத்தியமங்கலம், நிலக்கோட்டை, ஒசூா் உள்ளிட்ட இடங்களில் இருந்தும், மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. கோவையில் கோவிட் தொற்று தடுப்பு நடவடிக்கையாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் கோயில்களில் பொது மக்கள் தரிசனத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து கோவையில் கடந்த சில நாட்களாக பூக்களின் விலை குறைந்திருந்தது. இந்நிலையில் கேரளாவில் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை வருவதையொட்டி,கோவையிலிருந்து கேரளாவிற்கு அதிக அளவில் பூக்கள் அனுப்பப்படுகின்றன. இதனால் பூக்களின் தேவையும், விற்பனையும் அதிகரித்து, விலையும் உயா்ந்துள்ளது.

இது குறித்து கோவை மாவட்ட மலர் வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் அய்யப்பன் கூறுகையில்,

கோவையில் கடந்த வாரம் கிலோ ரூ.600க்கு விற்பனையான மல்லிகைப் பூ தற்போது ரூ.1800க்கு விற்பனை செய்யப்படுகின்றது.இதே போல மற்ற பூக்களின் விலையும்,. கடந்த வாரத்தைக் காட்டிலும் 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயா்ந்துள்ளதாகவும் குறிப்பாக கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு பூக்கள் விற்பனையால் வியாபரிகளும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க