• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஓட்டை பானையில் சமையல் செய்ய முயற்சித்து இருக்கிறார்கள் என்பதே இன்றைய பட்ஜெட்– ஸ்டாலின்

March 15, 2018 தண்டோரா குழு

ஓட்டை பானையில் சமையல் செய்ய முயற்சித்து இருக்கிறார்கள் என்பதே இன்றைய பட்ஜெட் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் விமர்சனம்  செய்துள்ளார்.

தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று காலை 10.30 மணிக்கு சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்நிலையில், தமிழக பட்ஜெட் தொடர்பாகதிமுக செயல் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர்,  

மோசமான நிதி நிலைமையில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் நிதி நிலை ஸ்தம்பித்துள்ளது என்பது இந்த பட்ஜெட்டில் தெரிகிறது. அதைபோல் விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள் முன்னேற்றத்திற்கு எந்த திட்டமும் இல்லை.ஓட்டை பானையில் சமையல் செய்ய முயற்சித்து இருக்கிறார்கள் என்பதே இன்றைய பட்ஜெட்என்று மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், மத்திய பா.ஜ., ஆட்சிக்கு ஜால்ரா போடும் ஆட்சியாக தமிழக அரசு நடக்கிறது என்பதற்கு எடுத்துகாட்டு தான் இன்றைய பட்ஜெட் என்றும் ஸ்டாலின் கூறினார்.

மேலும் படிக்க