• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஓடிடி தளங்களும் வரவேற்கத்தக்க ஒன்று தான்- நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பேட்டி.

June 18, 2022 தண்டோரா குழு

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி யின் நடிப்பில் ஊர்வசி, சத்தியராஜ் ஆகியோர் இணைந்து நடித்துள்ள வீட்ல விஷேசம் திரைப்படம்,நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கோவை புரூக் பீல்டு மாலில் இத்திரைப்படம் திரையிடப்படுள்ளது.

இந்நிலையில் புரூக் பீல்டு மாலில் இத்திரைப்படத்தினை பார்த்த பொதுமக்களை படத்தின் கதாநாயகரும் இயக்குனருமான ஆர்.ஜே பாலாஜி மற்றுமொரு இயக்குனரான சரவணன் ஆகியோர் சந்தித்து படத்தை குறித்து கேட்டறிந்தனர். பின்னர் பொதுமக்களுடம் புகைப்படம் எடுத்து கொண்டனர்.மேலும் அதில் தெலுங்குபாளையத்தை சேர்ந்த அமுதா என்பவர் நாட்டாமை படத்திற்கு பிறகு இந்த படத்திற்கு தான் வந்துள்ளதாக தெரிவித்தார்.

அதனால் பெரும் மகிழ்ச்சியடைந்த அவர், அவரை செய்தியாளர் சந்திப்பிற்கு அழைத்து வந்து அருகில் அமரவைத்து கொண்டார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய ஆர்.ஜே.பாலாஜி,

நான் கோவையில் தான் ஆர்ஜே வேலையை துவங்கியதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 300 கொலைகள், 500 கத்துகுத்துகள் அவ்வாறெல்லாம் இல்லாமல் குடும்பத்துடன் பார்க்கின்ற சாத்வீகமான படம் என தெரிவித்தார். மேலும் பல்வேறு மக்கள் ஹிந்தி படத்தை காட்டிலும் மிக நன்றாக உள்ளதாக தெரிவித்தாகவும் கூறினார்.

மேலும் நானே நினைத்தாலும் வில்லன் கதாப்பாத்திரம் எழுத தெரியாது எனவும் அது வராது எனவும் கூறிய அவர், குழந்தைகள் எனது படத்திற்கு வருவதால் கொலை செய்வது போதை பொருட்கள் விற்பது போன்று நடிப்பதற்கு விருப்பம் இல்லை என தெரிவித்தார். மூக்குத்தி அம்மன் படத்திற்கு கிடைத்த வெற்றியை பார்த்து தான் இது போன்று குடும்ப படம் எடுத்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் ஆர்.ஆர்.ஆர், ஜேஜிஎப் போன்ற படங்கள் வருவதால் இது போன்ற படத்திற்கு மக்கள் விருப்பம் காட்ட மாட்டோர்களோ என்ற பயம் இருந்ததாகவும் தற்போது அந்த பயம் இல்லை எனவும் தெரிவித்தார். PAN இந்தியா படங்களும் ஓட வேண்டும் இது போன்ற படங்களும் ஓட வேண்டும் எனவும் தெரிவித்தார். PAN இந்தியா படம் விருந்து பந்தியில் வைக்கும் குலோப் ஜாமூன் என்றால் இப்படத்தை பந்தியில் வைக்கும் மாங்காய் ஊருகாய் போல் பார்ப்பதாக கூறினார்.

தனது படிப்பு மற்றும் வேலையை சென்னையில் இருந்து வந்து கோவையில் துவங்கும் போது இருந்த தயக்கம் இருந்ததாகவுன் ஆனால் கோவையை விட்டு போகும் போது மனவருத்தம் இருந்ததாகவும் கூறினார். திரைப்படத்திற்கு ஓடிடி வந்ததும் நல்லது தான் எனவும் தெரிவித்தார். சினிமா வில் எனக்கு நல்ல கதாப்பாத்திரங்கள் கிடைக்காததால் நாமே இப்படத்தை எடுக்கலாம் என எடுத்ததாக தெரிவித்தார். இதில் பேசிய மற்றொரு இயக்குநர் சரவணன் இது போன்ற படம் இளைஞர்களுக்கும் பிடித்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.

மீண்டும் நயன்தாராவுடன் நடிக்க வாய்ப்புள்ளதா என கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அவர், அந்தந்த படத்திற்கு யார் ஏற்ற நடிகர் நடிகயர் யாரோ அவர்களை தான் தேர்ந்தெடுக்க முடியும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க