• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒர் ஆண்டில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு – கோவையில் 5604 விவசாயிகள் பயன்

April 16, 2022 தண்டோரா குழு

சென்னையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில் கடந்த ஒரு ஆண்டில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு பெற்ற விவசாயிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் விவசாயிகளுடன் தமிழக முதல்வர் காணொலி மூலம் கலந்துரையாடினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்கக்கோரி பதிவு செய்து காத்திருந்த விவசாயிகளுக்காக, ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை கடந்த 23.9.21 அன்று துவங்கி வைத்தார். கடந்த 6 மாத காலத்திற்குள் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தை சிறப்பிக்கும் வகையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு வருகை தந்து ஒரு லட்சமாவது விவசாய பயனாளிக்கு மின் இணைப்பு ஆணை வழங்கி விழாவுக்கு தலைமை ஏற்றார். பின்னர் பயன் அடைந்துள்ள விவசாயிகளுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடி பேசினார்.

கோவை மாவட்டத்தில் 5604 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். மேலும் சரவணம்பட்டி, ஈச்சனாரி, சூலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தனியார் கல்லூரிகளில் விவசாயிகள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர். கோவை சரவணம்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியர் சமீரன், மேயர் கல்பனா, துணை மேயர் வெற்றிசெல்வன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டார்.

மேலும் படிக்க