June 9, 2021
தண்டோரா குழு
தென் ஆப்பிரிக்கா கவுடெங் மாகாணத்தைச் சேர்ந்தவர் டெபோஹோ சோடெட்சி. இவரது மனைவி கோசியாம் தாமரா சித்தோல் (37). இவர் தற்போது 10 குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்றெடுத்து சாதனைப் படைத்துள்ளார்.
சிசேரியன் முறையில் 7 ஆண் குழந்தைகள் 3 பெண் குழந்தைகளை கோசியாம் தாமரா பெற்றுள்ளார். இதன் மூலம் வட அமெரிக்காவின் மொராக்கோ நகரைச் சேர்ந்த மாலியன் ஹலிமா சிஸ்ஸே 9 குழந்தைகளை பெற்று படைத்திருந்த சாதனையை முறியடித்துள்ளார்.
இது குறித்து டெபோஹோ சோடெட்சி கூறும் போது, “ 7 ஆண் குழந்தைகள், 3 பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர். நான் மிகவும் எமோஷனலாக உள்ளேன். சந்தோஷமாக உள்ளது.” என்றார்.
இவருக்கு ஏற்கெனவே 6 வயதில் இரட்டைக் குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.