• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஒரே நேரத்தில் லோக்சபாவுக்கும், மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்த அதிமுக எதிர்ப்பு

July 6, 2018 தண்டோரா குழு

ஒரே நேரத்தில் லோக்சபாவுக்கும், மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்த அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார். அவரது யோசனைக்கு சட்ட ஆணையமும் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, 2019-ம் ஆண்டு மற்றும் 2024-ம் ஆண்டு என இரண்டு கட்டங்களாக ‘ஒரே நேரத்தில் தேர்தல்’ திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என்று சட்ட ஆணையம் சிபாரிசு செய்துள்ளது.

அதாவது, 2021-ம் ஆண்டுக்குள் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில் 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடத்தலாம் என்றும், மற்ற மாநிலங்களில் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடத்தலாம் என்றும் சிபாரிசு செய்துள்ளது.இதற்கிடையில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த சட்ட ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதற்காக டெல்லியில், 7 மற்றும் 8-ந் தேதிகளில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள் மற்றும் 59 மாநில கட்சிகளுக்கு சட்ட ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. இந்நிலையில், ”ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக ஜூன் 29 ஆம் தேதி சட்ட ஆணையத்திற்கு அதிமுக சார்பில் எழுதப்பட்ட கடிதத்தில்,

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஜெயலலிதா ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.தற்போதைய சட்டமன்றத்தின் ஆயுட்காலத்தை குறைக்கும் வகையில் எந்த மாற்றமும் கொண்டு வரக்கூடாது. நாளை நடைபெறும் சட்ட ஆணையம் கூட்டத்தில் அதிமுக சார்பில் தம்பிதுரை மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர் பங்கேற்க உள்ளனர் என்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க