• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒரே அறையில் இரட்டை கழிப்பிட விவகாரம் – கோவை மாநகராட்சி விளக்கம்

September 8, 2022 தண்டோரா குழு

அம்மன்குளம் பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் சார்பாக கட்டப்பட்டுள்ள சமுதாய கழிவறை வளாகத்தில்,ஒரே அறையினை இருவர் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கபட்டு இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில்,இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், இக்கழிப்பிடம் 1995 ம் ஆண்டு கட்டப்பட்டது.இதில் ஆண் மற்றும் பெண் என இருபாலாருக்கும் கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது.கூடுதலாக சிறுவர்களுக்கும் கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கான கழிப்பிடத்தில் சிறுவர்கள் பெரியவர்களின் கண்காணிப்பில் இக்கழிப்பிடத்தை உபயோகப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் , கதவுகள் இருந்தால் குழந்தைகளால் உள்புறம் தாழிட்ட பின் திறந்து வெளியே வர இயலாது என்பதாலும் கதவுகள் பொருத்தப்படவில்லை.

இக்கழிப்பிடத்தில் உள்ள பழுதுகளை நீக்கி , பராமரிப்பு செய்ய ஏற்கனவே அனுமதிக்கப்பட்டு பணி நடைபெற்று வருகிறது.சிறுவர்கள் உபயோகப்படுத்த அமைக்கப்பட்ட கழிப்பிடம் உபயோகம் இல்லாமல் இருப்பதால் அவைகளை பெரியவர்களுக்கான சிறுநீர் கழிப்பிடமாக மாற்ற ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சிறுவர்களுக்கான கழிப்பிடத்தை பெரியவர்களுக்கான சிறுநீர் கழிப்பிடமாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.

விரைவில் இப்பணி முடிக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என மாநகராட்சி ஆணையாளர் ( பொ ) மரு.மோ.ஷர்மிளா தெரிவித்துள்ளார் .

மேலும் படிக்க